Apps

சொமேட்டோவின் ‘இனிஃபினிட்டி டைனிங்’ திட்டம் அறிமுகம்!

ஆன்லைன் உணவு டெலிவிரி ஆப்களில் முன்னணியில் இருக்கும் சொமேட்டோ, ‘இன்ஃபினிட்டி டைனிங்’ என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சொமேட்டோ கோல்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சொமேட்டோவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவகங்களுக்குச் சென்று அன்லிமிடெட் ஆக சாப்பிட முடியும். எந்த உணவகத்துக்குச் செல்ல விருப்பப்படுகிறோமோ அதில், சொமேட்டோ செயலியின் மூலம் முன் கூட்டியே, முன்பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும்.

சொமேட்டோவின் ‘இனிஃபினிட்டி டைனிங்’ திட்டம் அறிமுகம்!

அங்கு சென்று ஒரு டிஷ்ஷை எவ்வளவு முறை வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். கூடுதலாக சார்ஜ் செய்யப்படாது. எத்தனை பேரை வேண்டுமானாலும் இந்த ‘இன்ஃபினிட்டி டைனிங்’ மூலம் அழைத்துச் செல்ல முடியும். மேலும், 6 வயது வரை இருக்கும் குழந்தைகள், இலவசமாக சாப்பிட அழைத்துச் செல்லலாம்.

தற்போதைக்கு இந்த புதிய திட்டத்தை மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் மட்டும் கொண்டு வந்துள்ளது சொமேட்டோ. அங்கிருக்கும் 350 உணவகங்களை இந்தத் திட்டத்திற்குக் கீழ் கொண்டு வந்துள்ளது சொமேட்டோ. கூடிய விரைவில் மற்ற முக்கிய நகரங்களில் இத்திட்டம் விரவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது. 

சொமேட்டோ, தனது கோல்டு வாடிக்கையாளர்களின் அளவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக கூறுகிறது. தற்போது சொமேட்டோவுக்கு இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லெபனான், துருக்கி, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் 12.5 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. 

Related posts

சம்பள நாட்களுக்கான சலுகைகள்… ஸ்மார்ட் டிவிகளுக்கு 60% வரை சலுகைகள் வழங்கும் அமேசான்!!

TechNews Tamil

7 நாட்களுக்கு 7 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்

TechNews Tamil

டிக் டாக் செயலிக்குப் போட்டியாக Zee5 செயலி!!

TechNews Tamil