Mobile

அறிமுகமானது விவோ வி19 ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனம் புதிய விவோ வி19 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இது விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் அட்ரினோ 612ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10  இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

விவோ வி19 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் போன்ற கேமராவைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது விவோ வி19 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.

விவோ வி19 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை

டூயல் 4ஜி வோல்டிஇ, புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் களம் இறங்கிய லாவா இசட் 1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil