Mobile

அறிமுகமானது விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்1 பிரைம் என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எஸ்1 பிரைம் ஸ்மாரட்போன் 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினையும், 1,080×2,340 பிக்சல் திர்மானம் கொண்டதாகவும் உள்ளது. விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

அறிமுகமானது விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினையும் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்.

Related posts

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

ரூ.10,390 ரூபாய் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள மோட்டரலா மோட்டோ ஈ6!

TechNews Tamil

அறிமுகமானது மேம்பட்ட அம்சங்களுடன் லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil