விவோ நிறுவனம் தற்போது நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை – ரூ.53,440
விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.89 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2256 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி உடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவு கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு, ஃபன்டச் ஒஎஸ்10 ஆதரவு கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி ஆதரவு, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ் 10 க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.