விவோ நிறுவனம் புதிய Vivo iQoo Neo 855 வகையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
1. விவோ ஐக்யூ நியோ 855 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி வகை – ரூ.20,000
2. விவோ ஐக்யூ நியோ 855 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி வகை- ரூ. 23,000
3. விவோ ஐக்யூ நியோ 855 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வகை- ரூ .25,000
4. விவோ ஐக்யூ நியோ 855 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி வகை- ரூ. 27,000

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் அளவிலான முழு எச்டி உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானத்துடன் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டதாக உள்ளது. இது கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
மேலும் இந்த போன் ஆனது 2.84GHz ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவை பொறுத்தவரை, இது மூன்று பின்புற கேமரா அமைப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவைகள் உள்ளன.
மேலும் இது 12 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 128 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது.
இது 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, யூ.எஸ்.பி டைப்-சி, வைஃபை 802.11ac, ப்ளூடூத், 4ஜி வோல்டிஇ போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.