Mobile

அறிமுகமானது விவோ ஜி1 5ஜி ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனம் சீனாவில் விவோ ஜி1 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகின்றது.

இந்த விவோ ஜி1 ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED HDR10 டிஸ்பிளேவினையும், 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது சாம்சங் எக்ஸிநோஸ் 980எஸ்ஒசி சிப்செட் வசதியினையும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் போன்றவற்றினையும், முன்புறத்தில் 32எம்பி டூயல் செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.

விவோ ஜி1 ஸ்மார்ட்போன் ஆனது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவாக 5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ,யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது டெக்னோ பூவா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள நோக்கியா 8.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil