சோனி நிறுவனம் இந்தியாவில் WH CH710N என்ற வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்போன் பயனர்கள் எதிர்பார்க்கும் அம்சமான நாய்ல் கேன்சலேஷன் வசதியைக் கொண்ட்தாக உள்ளது.
இந்த ஹெட்போன் ஆனது டூயல் நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம், நீண்ட பேட்டரி பேக்கப், குவிக் சார்ஜ் தொழில்நுட்பம், வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

மேலும் இது நாய்ஸ் கேன்சலேஷன் ஃபில்ட்டரை சீராக இயக்கச் செய்யும் படியாக உள்ளது. அதாவது மைக்ரோபோன்கள் மூலம் நாய்ஸ் கேன்சலேஷனைக் கொண்டு, வெளிப்புற சத்தத்தை குறைக்கச் செய்கிறது. மேலும் இதில் உள்ள ஆம்பியன்ட் நாய்ஸ்மோட், பயனர்கள் விரும்பும் நேரத்தில் வெளிப்புற சத்தத்தை கேட்க உதவுவதாய் உள்ளது.
இந்த WH CH710N வயர்லெஸ் ஹெட்போன் என்எப்சி வசதி கொண்ட்தாக உள்ளது, இதன்மூலம் இதனை மற்ற சாதனங்களுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். பேட்டரியானது ஒருமுறை சார்ஜ் செய்தால் 35 மணி நேரம் பயன்படுத்த உதவுகிறது.
10 நிமிடங்கள் சார்ஜ் செய்யப்பட்ட ஹெட்போன் ஒரு மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குவதாய் உள்ளது.