சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 01 கோரை என்ற ஸ்மார்ட்போனை மலிவான விலையில் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போன் 5.3 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் அண்ட்ராய்டு கோ இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி 6739 சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 1 ஜிபி மற்றும் 2 ஜிபி ரேம் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 8 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.
மேலும் 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. டைனமிக் ஸ்கிரீன் அவுட் மற்றும் பவர் ஆப்டிமைசேஷனுடன் கூடிய டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 01 கோர் இரண்டு வேரியண்ட் வகைகளில் வெளியாகியுள்ளது.