Mobile

ஜப்பானில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன்!

ஓப்போ நிறுவனம் ஜப்பானில் தற்போது ஓப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஓப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஜப்பானில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன்!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் 4025எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது இரட்டை சிம், 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் இன்ஃபினிக்ஸ் நோட் 12 ஐ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil