Mobile

அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 8ஏ டூயல் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

  1. ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை – ரூ.6,499
  2. ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் வகையின் விலை- ரூ.6,999

இந்த சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 2ஜிபி/3ஜிபி ரேம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

ஸ்மார்ட்போன் மாடல் வரும் பிப்ரவரி 18-ம் தேதி அமேசான் மற்றும் மி.காம் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் உடன் 10,000எம்ஏஎச் பவர்பேங் மாடலை ரூ.1,299-விலையில் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

Related posts

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு!!!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள நோக்கியா 7.3 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil