மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் மினி சாதனமானது இன்று வெளியாகியுள்ளது.
ரியல்மி பேட் மினி சாதனம் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு கொண்டு இயங்குவதாக உள்ளது. ரியல்மி பேட் மினி சாதனம் 8.7 இன்ச் எல்சிடி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் 1,340×800 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த சாதனம் 84.59 டிஸ்ப்ளே டூ உடல் விகிதத்தைக் கொண்டுள்ளது. ரியல்மி பேட் மினி சாதனம் ஆக்டோ கோர் யூனிசோக் டி616 எஸ்ஓசி ஆதரவு கொண்டு இயங்குவதாக உள்ளது.
மெமரி அளவாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் கொண்டுள்ளது. கேமரா அளவாக பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா , 5 எம்பி முன்புற கேமரா கொண்டுள்ளது.
மெமரியினை நீட்டிக்க 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக் கூடியதாக உள்ளது.
பேட்டரி அளவாக 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6400 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவாக ஜிஎஸ்எம், ப்ளூடூத் வி5 வசதி கொண்டுள்ளது.