Mobile

அறிமுகமானது Realme X50 5G ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் சீனாவில் ரியல்மி எக்ஸ்50 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது,

  1. ரியல்மி எக்ஸ்50 5ஜி  8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.25,805
  2. ரியல்மி எக்ஸ்50 5ஜி  6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.30,970
  3. ரியல்மி எக்ஸ்50 5ஜி  12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.32,005

இந்த ஸ்மார்ட்போன் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.57 இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது Realme X50 5G ஸ்மார்ட்போன்!

மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி/ 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 12எம்பி டெலி போட்டோ லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 முன்புறத்தில் 16எம்பி, 8எம்பி டூயல் செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.

 இது 4200எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, புளூடூத் 5இ ஜிபிஎஸ்,என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் வெளியான சியோமி எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் ஒப்போ பைண்ட் என் ஸ்மார்ட்போன் அறிமுகம்

TechNews Tamil

Oppo A9 2020 ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி!!

TechNews Tamil