Mobile

அறிமுகமானது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் குறித்த அம்சங்களைப் பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்” தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் கொண்டுள்ளது, இது அட்ரினோ 618ஜிபியு வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது,  மேலும் முன்புறத்தில் 20எம்பி, 2எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது பனோரமா செல்பீ மோட், யுஐ பேஸ் டிஸ்டார்ஷன் கரெக்ஷன், யுஐ பியூடிப்பை, யுஐ போர்ட்ரெயிட் மோட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இரு தினங்களில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்!!

TechNews Tamil

இந்தியாவில் அடுத்த வாரம் களமிறங்கவுள்ள இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் உடன் அறிமுகமானது நோக்கியா C5 Endi ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil