Mobile

அறிமுகமானது ப்ளேஸிங் ப்ளூ வண்ணத்தில் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ எப்15 என்ற ஸ்மார்ட்போனை ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது, அந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே லைட்னிங் பிளாக் மற்றும் யூனிகார்ன் ஒயிட் வண்ணங்களில் வெளியாகி இருந்தநிலையில் தற்போது ப்ளேஸிங் ப்ளூ வண்ண நிறத்தில் அறிமுகமாகியுள்ளது.

ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3′ இன்ச் கொண்ட 2400×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட முழுஎச்.டி பிளஸ் அம்சத்தினைக் கொண்டுள்ளது. மேலும் அமோலேட் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

அறிமுகமானது ப்ளேஸிங் ப்ளூ வண்ணத்தில் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க வசதி கொண்டுள்ளது. மேலும் 512 ஜிபி வரை மெமரியினை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா போன்றவற்றையும் முன்புறத்தில் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸ் கேமராவை, 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவை கொண்டு இயங்குவதாக உள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

மீண்டும் விற்பனைக்கு வந்த விவோ யு10 ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி நோட் 10 & நோட் 10 பிளஸ் இன் விலை நிர்ணயம் !

TechNews Tamil