Mobile

அறிமுகமானது ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன்!

ஒப்போ நிறுவனம் இந்தோனேசியாவில் ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எல்சிடி முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதி கொண்டதாகவும், மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

அறிமுகமானது ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன்!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினையும் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ராவைடு சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. பாதுகாப்பு அம்சமாக இது பேஸ் அன்லாக வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி (எஸ்ஏ / என்எஸ்ஏ) / இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இன்-டிஸ்ப்ளே சென்சார் கொண்ட விவோ Z5!

TechNews Tamil

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

TechNews Tamil

அறிமுகமானது ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil