ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ9 2020 ஸ்மார்ட்போனின் வெனிலா மின்ட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் மெமரியானது 128 ஜி.பி. மெமரி என்ற அளவிலும், 8 ஜி.பி. ரேம் என்ற அளவிலும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வென்னிலா மின்ட் மாடலுடன் மரைன் கிரீன், ஸ்பேஸ் பர்ப்பிள் மற்றும் வைட் டியல் நிறங்களிலும் விற்பனை ஆகிறது.

- ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 15,990
- ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 19,990
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டுள்ளதாக உள்ளது.
மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டுள்ளதாக உள்ளது. மேலும் இது 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.