ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் கம்போடியாவில் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது. மேலும் இந்த ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் இது கலர்ஓஎஸ் 6.1 இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் இது 6.2 இன்ச் எச்டி உடன் 720×1,520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.
இந்த போன் 2.3GHz மீடியாடெக் ஹீலியோ பி 35 ஆக்டா கோர் SoC கொண்டு இயங்குவதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு 256 ஜிபி வரை நீட்டிக்கக்கூடியதாக உள்ளது.
ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் போன்றவற்றையும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரியைப் பொறுத்தவரை 4,230 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், பின்புற கைரேகை சென்சார் வசதி மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது.