Mobile

அறிமுகமானது மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்!

 மோட்டோரோலா நிறுவனம் தற்போது புதிய மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினையும், மேலும் 1080 × 2520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765 7என்எம் பிராசஸர் வசதியினையும் அட்ரினோ 620ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

அறிமுகமானது மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியை கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி, 8எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வோல்டிஇ, வைஃபை 6 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5 ஜிஹெர்ட்ஸ்), புளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ,என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஒரு வாரத்தில் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வியட்நாமில் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் Vivo Y19!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil