Mobile

அறிமுகமானது மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனம் தற்போது மி நோட் 10 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.47 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 1080 x2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது இன்-டிஸ்பிளே கைரேகை ரீடர் வசதியை கொண்டுள்ளது. இந்த சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

அறிமுகமானது மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!

இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடன் MIUI 11 ஆதரவு கொண்டதாக உள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா, டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0,என்எப்சி, ஜிபிஎஸ், டூயல் ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது 5260எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிப்ரவரி மாதம் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி ஆஃபர்கள் அறிவிப்பு.!

TechNews Tamil