Mobile

அறிமுகமானது நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனின் மெலோவர் பதிப்பு!!

நுபியா நிறுவனம் நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனை மார்ச் 12 ஆம் தேதி அறிமுகம் செய்தது. தற்போது நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனின் மெலோவர் பதிப்பினை வெளியிட்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் 6.65 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 × 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர் வசதியையும் மேலும் அட்ரினோ 620ஜிபியு வசதியையும் கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மெமரி அமைப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனின் மெலோவர் பதிப்பு!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி மெயின் சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்புறத்தில் 12எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், பேஸ்அன்லாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் 5100எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது புளூடூத் 5, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஜியோவை அதிரடிக்க ஏர்டெலில் 1.5 ஜி.பி. டேட்டா

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள ஹானர் 20எஸ்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 28 இல் அறிமுகமாகவுள்ள ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil