எல்ஜி நிறுவனம் தற்போது எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 5.7 இன்ச் குரடட விஷன் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6762 பிராசஸர் வசதி கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் போன்றவற்றினையும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்/க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது.