லாவா நிறுவனம் லாவா இசட்53 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்
1. லாவா இசட்53 ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 4829

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.1 இன்ச் .டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1280×600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் இது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் SC9832E பிராசஸர் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.
மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 1 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. மெமரி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது. மேலும் இது மாலி 820MP1 GPU வசதி கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 8 எம்.பி. பிரைமரி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 5 எம்.பி. செல்ஃபி கேமரா கேமராவினைக் கொண்டுள்ளது.
இது 4120 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, 4ஜி இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.