டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9000 சீரிஸ் புதிய லேப்டாப் லேட்டிடியூட் 9510மாடல் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த புதிய டெல் லேப்டாப் மார்ச்-26 ஆம் தேதி விற்பனையைத் துவக்க உள்ளதாக தகவல்கல் வெளியாகி உள்ளன.
இந்த லேப்டாப் 15 இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 14 இன்ச் நோட்புக் அளவிலும் கொண்டுள்ளது.
இந்த லேப்டாப்பின் 2 இன் 1 வேரியண்ட்டிலும் தொடுதிரை வசதி உள்ளது. இது இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

இது இன்டெல் வைஃபை6 மற்றும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் வசதி கொண்டுள்ளது. இது கார்பன் பிளேடு ஃபோன்களையும், டூயல் ஹீட் பைப்களையும் கொண்டுள்ளது.
இது ஆம்ப் மற்றும் நான்கு வாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்களை கொண்டுள்ளது. இது இன்டெலிஜண்ட் ஆடியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
இது எக்ஸ்பிரஸ்சார்ஜ் பூஸ்ட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் மற்றும் டைமண்ட் கட் எட்ஜ்கள் கொண்டது.