ஐகூ பிராண்டின் புதிய ஐகூ யு1 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080×2340 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, அட்ரினோ 618 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வசதி கொண்டதாகவும் உள்ளது.
மேலும் கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றையும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா பன்ச் ஹோல் கட்அவுட்டினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஐகூ யு1 ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியைக் கொண்டதாகவும் உள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஐகூ யு1 ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது. மேலும் இது 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.