போக்கோ நிறுவனம் தற்போது சர்வதேச சந்தையில் ஃபிளாக்ஷிப் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் இ3 சூப்பர் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.
கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை பின்புறத்தில் இது 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெலி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் வசதி கொண்டுள்ளது. முன்புறத்தில் 20 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
அட்ரினோ 650 GPU வினையும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி, 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

இது MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் கூடுதலாக 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ போன்றவற்றினையும் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினையும், 4700 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.