Mobile

அசர வைக்கும் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.82 இன்ச் எச்டி பிளஸ் மினி டிராப் நாட்ச் கிளாஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1640 x 720 பிக்சல் தீர்மானம்  கொண்டுள்ளது. இது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 12என்எம் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியையும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், டெப்த் சென்சார் போன்றவற்றினையும், மேலும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி ஆதரவினைக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இன்று நியூயார்க்கில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 10!!

TechNews Tamil

ரூ.1000 விலை உயர்வுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil