மொபைல் போன் நிறுவனமான விவோ நிறுவனம் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை மாடலை வெளியிட்டுள்ளது. இந்த ஐகூ யு1எக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டாகோர் குவால்காம் 662 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது,, மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0 கொண்டதாக உள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 கொண்டதாகவும் மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ் கொண்டுள்ளது.