சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.4 இன்ச் வளைந்த சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பினையும், சுழலும் டச் பெசல் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஎக்ஸ் பிளஸ் பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் 39 உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் வாட் இ-சிம் கனெக்டிவிட்டி வசதி கொண்டதாகவும், அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் என அனைத்தையும் பயன்படுத்த முடியும்.
மேலும் இது எக்சைனோஸ் 9110 டூயல் கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 1.5ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இதய துடிப்பு சென்சார், கைரேஸ்கோப், பாரோமீட்டர் எலெக்ட்ரோகார்டியோகிராம்,அக்செல்லோமீட்டர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த வாட்ச் ஆனது 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G சான்று மற்றும் இ-சிம், 4ஜி எல்டி, பி1, பி2, பி3, பி4, பி5, பி7, பி8, பி12, பி13, பி20, மற்றும் பி66 போன்ற ஆதரவுகளையும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5, வைபை,A-GPS/ GLONASS/ Beidou போன்றவற்றையும் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி வாட்ச் 340எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியுட்டுவதாக உள்ளது.