சாம்சங் நிறுவனம் தற்போது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்ட கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
1. சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ் 4 ஜிபி + 128 ஜிபி வகையின் விலை – ரூ.15,999
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எச்டி மற்றும் 1560 x 720 பிக்சல் தீர்மானம் கொண்ட இன்ஃபினிட்டி-வி சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி 71 ஜி.பீ.யுடனான ஆக்டா கோர் எக்ஸினோஸ் 7904 14 என்எம் ப்ராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது., ஆண்ட்ராய்டு 9.0 பை ஓஎஸ் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 25 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்ற ட்ரிபிள் கேமரா அமைப்பு, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவைகளும் உள்ளது.