Mobile

அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரெட்மி நிறுவனம் அதன் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

  1. கே30 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் கொண்ட வகையின் விலை- ரூ.20,140
  2. கே30 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் கொண்ட வகையின் விலை- ரூ.23,160
  3. கே30 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் கொண்ட வகையின் விலை- ரூ.26,189

இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. அடுத்து இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு கொண்டதாக உள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான இயங்குதளத்தை கொண்டுள்ளது.

 இது 8ஜிபி/8ஜிபி /12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/ 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் இந்த போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா, 5எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 20எம்பி, 2எம்பி என்ற டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

டூயல் கேமராவுடன் கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளே!!

TechNews Tamil

வந்தது Redmi Note 6 Pro இல் MIUI 11 அப்டேட்!

TechNews Tamil