ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.2 இன்ச் எஸ்டிஎன் பிளாக் அண்ட் வைட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது அழைப்புகள், குறுந்தகவல், மின்னஞ்சல் நோட்டிபிகேஷன் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் மாணிட்டரிங் வசதி ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 3 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் போன்ற வசதிகளைக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5.0 எல்இ வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐஒஎஸ் 10 வசதி கொண்டதாகவும், மேலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவும் உள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 160 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.
மேலும் அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் ரெட், பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் வெளியாகியுள்ளது.