ஒப்போ நிறுவனம் ஓப்போ எஃப்15 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் FHD பிளஸ் AMOLED ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.
1. ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ. 19,990
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் கொண்டதாக உள்ளது. 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா, 2 எம்.பி. மோனோ கேமரா கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 128 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது. இது கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டுள்ளது.
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினை கொண்டதாக உள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி கொண்டுள்ளது.