ஏசர் நிறுவனம் இன்று ஏசர் ஸ்விப்ட் 3 நோட்புக் என்னும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் லேப்டாப் 14 இன்ச் முழு எச்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளேவினையும், 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
இந்த லேப்டாப் AMD Ryzen 5 4500u பிராசஸர் வசதியினையும் ஆன்-போர்டு ரேடியான் கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுவதாகவும் உள்ளது. ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் லேப்டாப் மெமரி அளவினைப் பொறுத்தவரை 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி எஸ்எஸ்டி ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் இது 11 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டதாகவும், 30நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 4மணி நேரம் வீடியோ பிளே பேக் தன்மை கொண்டும் உள்ளது.
லேப்டாப் விண்டோஸ் 10 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 2019, டி.டி.எஸ் ஆடியோ, விண்டோஸ் ஹலோ கைரேகை ரீடர், வேக் ஆன் வாய்ஸ் (WoV) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், பவர்-ஆஃப் சார்ஜிங் கொண்ட 1 எக்ஸ் யூ.எஸ்.பி 3.2 ஜென் 1 போர்ட், 1 எக்ஸ் யூ.எஸ்.பி 2.0 போர்ட், டூயல் பேண்ட வைஃபை 6 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.