Gadgets

அறிமுகமானது ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல்!

ஏசர் நிறுவனம் தற்போது புதிய ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல் ஆன் லைன் விற்பனை வாயிலாகவும், ஏசர் சேனல் பார்ட்னர் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஏசர் ஒன் 14 லேப்டாப் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம். அதாவது ஏசர் ஒன் 14 லேப்டாப் ஆனது 14 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும், இந்த லேப்டாப் இன்டெல் பென்டியம் கோல்ட் செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல் ஆனது 4GB DDR4 ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, இன்டெல் வைஃபை 10 ப்ளூடூத் இணைப்பினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஏசர் ஒன் 14 லேப்டாப் மைக்ரோஃபோனுடன் எச்டி கேம் மற்றும் 4 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 1 ஜிகாபிட் லேன் போர்ட், 2 யூ.எஸ்.பி 3.0 டைப்-ஏ, 1 யூ.எஸ்.பி 2.0 டைப் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் சிரோ டிவி மாடல்!!

TechNews Tamil

ஒன்பிளஸ் டிவி : ஸ்மார்ட்போனுடன் இணைத்துப் பயன்படுத்தலாம் இந்த டிவியை!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மாடல்!!

TechNews Tamil