Mobile

ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வேரியண்ட் அறிமுகம்!

ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் 8ஜிபி வேரியண்ட் ஆனது இந்தியாவில் அமேசான் ப்ரைம் டே சேலினை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ஏற்கனவே 6ஜிபி ரேம் அறிமுகப்படுத்தி பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற நிலையில், தற்போது 8 ஜிபி ரேம் பவர் ஸ்மார்ட்போனும் சிறப்பான வரவேற்பினைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வேரியண்ட் அறிமுகம்!

ஒப்போ ஏ 52 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் FHD+ பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவினையும், மல்டிமீடியா ஸ்ட்ரீமிங்கிற்கான சிறந்த-இன்-கிளாஸ் காட்சியை கொண்டும் உள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றையும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வியட்நாமில் வெளியாகியுள்ள ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாகியுள்ளது விவோ வை20ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil