Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் அறிமுகம்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போனை செப்டம்பர் 14 ஆம் தேதி சீனாவில் வெளியிட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது 7 இன்ச் எச்டி பிளஸ் 720×1,640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 2 ஜிஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 குவாட் கோர் செயலி கொண்டதாகவும் உள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் அறிமுகம்!

மேலும் ஆண்ட்ராய்டு 10 HIOS 6.1 இயங்குதளம் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் பின்புற பிரைமரி கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கொண்ட பொக்கே மற்றும் மேக்ரோ சென்சார் ஏஐ லென்ஸ் குவாட் எல்இடி ஃபிளாஷ் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை பின்புற கைரேகை சென்சார் டூயல் நானோ சிம் புளூடூத் v5 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி கொண்டதாகவும், மேலும் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro!

TechNews Tamil

Funtouch OS 9.1 உடன் களமிறங்கிய Vivo Z1x இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil