டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
- டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 8,499
இந்த ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 1 ஆம் தேதி விற்பனையைத் துவக்கியுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.35 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் டெக்னோவின் ஹை ஒ.எஸ். 5.5 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரையில் முன்புறத்தில் மூன்று கேமராவினைக் கொண்டுள்ளது, அதாவது 13 எம்.பி. கேமரா, 8 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
முன்புறத்தில் 13 எம்.பி. கேமரா கொண்டதாக உள்ளது, மேலும் இது ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் கைரேகை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டதாக
உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.