Mobile

அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன்!

டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 23 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் 7 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 720×1640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2எம்பி மேக்ரோ கேமரா, ஏஐ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹிலீயோ பி22 12என்எம் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

48MP கேமிரா ஸ்மார்ட் போன் உடன் வெளியான மோட்டோரோலா ஒன் ஸூம்

TechNews Tamil

பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள கூல்பேட் எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil