Mobile

அறிமுகமானது டெக்னோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன்!

டெக்னோ நிறுவனம் டெக்கோ கமோன் 15 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கான விற்பனை பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரியினை அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், அல்ட்ரா நைட் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32எம்பி பாப்-அப் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

பொங்கலை ஒட்டி களமிறங்கும் கேலக்ஸி எஸ்11!

TechNews Tamil

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான விலைகுறைப்பு.!

TechNews Tamil

ரூ.7,956க்கு அறிமுகமான ஜியோனி ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil