சோனி நிறுவனம் தற்போது WF-XB700 மற்றும் WF-SP800N ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது சோனி WF-XB700 மாடல் இயர்பட்ஸ் ஆனது 12எம்எம் டிரைவர்களைக் கொண்டதாகவும், மேலும் எக்ஸ்டிரா பேஸ் தொழில்நுட்ப வசதி கொண்டும் உள்ளது, இந்த இயர்பட்ஸ் மற்றதைப் போல் அல்லாமல் பயனர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாய் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் உள்ளது.
மேலும் இது IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவும், மேலும் ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் WF-XB700 இயர்பட்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸில் வால்யூம், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களும் உள்ளது.

9 மணி நேரத்திற்கு பேக்கப் வசதி கொண்டதாகவும், மேலும் இது புதிய WF-SP800N இயர்பட்ஸ் மாடல் ஆனது நாய்ஸ் கேன்சலிங் வசதி கொண்டு தரமான ஒலி அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இதில் IP55தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
WF-SP800N இயர்பட்ஸ் ஆனது ப்ளூடூத் 5 தொழில்நுட்ப வசதி கொண்டதாகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங் வசதி, அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல், இன்ட்யூட்டிவ் டச்கண்ட்ரோல் மற்றும் இயர்பட்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.