சோனி நிறுவனம் அதன் Sony Xperia 5 ஸ்மார்ட்போனை IFA 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
இரட்டை சிம் உடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை கொண்டு இயங்குகிறது. இது 6.1 இன்ச் அளவிலான முழு எச்டி+ (1080×2520 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 21: 9 என்கிற அளவிலான திரை விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு மற்றும் 10-பிட் கலர் க்ரேடியேஷன் போன்றவையும் இதில் உள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டில் 512 ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு உள்ளது, மேலும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பகமும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 SoC உடன் ஒருங்கிணைந்த X24 LTE Modem மற்றும் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.
சோனி எக்ஸ்பீரியா 5 இல் 12 மெகாபிக்சல் கேமராக்கள் (26 மிமீ, 16 மிமீ, 52 மிமீ) சூப்பர் வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் போன்றவை உள்ளது.
சோனி எக்ஸ்பீரியா 5 இல் செல்பீக்கு எஃப் / 2.0 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமரா ஒன்று உள்ளது. மேலும் இது ஒரு 3140 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.