ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். என்ற வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு என்ற 47.2 எம்.எம். மாடல் அறிமுகமாகி, மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்றது. மேலும் இது 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

இதில் சிறப்புமிக்க அம்சமாக 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. மேலும் இதன் பேட்டரியானது அதிகபட்சமாக 12 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் தன்மை கொண்டது, இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இதனை வாங்க ஆர்வமாக உள்ளனர்.
மேலும் இது 1.2-இன்ச் டிஸ்ப்ளேவுடன் 390×390 பிக்சல் தீர்மானத்தினையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, AF கோட்டிங் போன்றவற்றையும் கொண்டுள்ளது.
சென்சாரைப் பொறுத்தவரையில், பயோ டிராக்கர் PPG பயோ டிராக்கிங் ஆப்டிக்கல் சென்சார், ஏர் பிரெஷர் சென்சார், கேபாசிட்டிவ் சென்சார்
ஆம்பியன்ட் லைட் பிரைட்னஸ் சென்சார் போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது.195 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு 12 நாட்களுக்கு சார்ஜ் நிற்கக்கூடியதாக உள்ளது.