Gadgets

அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் 10.4 இன்ச் WUXGA TFT டிஸ்பிளேவினையும், 2000 × 1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த டேப்லெட் மாடல் ஆனது 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலின் பின்புறத்தில் 8எம்பி ஆட்டோஃபோகஸ் கேமராவினையும், முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்!

மேலும் இது, மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரியினை நீட்டிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடல் 7040எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இதன் விற்பனையானது ஜூன் 16 ஆம் தேதி முதல், அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா இ-ஸ்டோரில் துவங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அறிமுகமானது கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் வாட்ச்!

TechNews Tamil

ஒரே நேரத்தில் 3 ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய ஏற்ற Mi Power Bank 3!

TechNews Tamil

வந்தது எலக்ட்ரிக் சானிடைசர்…. 20 நிமிடங்களில் நுண்ணுயிரிகள் காலி!!

TechNews Tamil