Mobile

அறிமுகமானது குவாண்டம் சிப் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் தற்போது தென் கொரியாவை சேர்ந்த எஸ்கே டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து கேலக்ஸி ஏ குவாண்டம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

குவாண்டம் ரேண்டம் நம்பர் ஜெனரேஷன் சிப்செட் கொண்ட உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இது உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 980 பிராசஸர் உடன் மாலி-G76 MP5GPU ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 2.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்பிளே கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

Related posts

கேமிங் பிரியர்களுக்காக வரவுள்ள நுபியா ரெட் மேஜிக் 3S.!!

TechNews Tamil

பிளிப்கார்ட்: ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

TechNews Tamil

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil