சாம்சங் நிறுவனம் தற்போது புதிய க்ரோம்புக் 2-இன்-1 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இந்த மாடல் 4கே AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. அதாவது இது 13.3 இன்ச் 4கே AMOLED டச் ஸ்கிரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது. மேலும் இது 2 x 2வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பேக்லைட் கீபோர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது க்ரோம்புக் 2-இன்-1 இன்டெல் யு.எச்.டி கிராபிக்ஸ் உடன் 10-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 செயலி கொண்டு இயங்கும் தன்மையானது.
இது முன்புறத்தில் 1எம்பி கேமரா கொண்டுள்ளது, இது க்ரோம்புக் க்ரோம்ஒஎஸ் அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானதாக உள்ளது.
இது 49வாட் பேட்டரி வசதி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் வைஃபை6 ஆதரவு கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி எஸ்டி கார்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.