Mobile

அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2400×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. மேக்ரோ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

அட்ரினோ 640 GPU வசதி கொண்ட சிப்செட் அமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.

இது  ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம் கொண்டதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 கொண்டதாக உள்ளது. இது  4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

அசர வைக்கும் அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Samsung Galaxy A70s க்கு ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ஆஃபர்கள்!

TechNews Tamil

விரைவில் இந்தியாவில் களம் இறங்கவுள்ள ஐடெல் விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil