Mobile

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!!

சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது.

தற்போது கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலையானது தற்போது வரை வெளியாகவில்லை. இதன் விலை விவரமானது அடுத்த வாரம் ஜனவரி 7 ஆம் தேதியன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது. இது 10nmஆக்டா கோர் ப்ராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!!

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா வசதி கொண்டதாக உள்ளது.

இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

7000 எம்ஏஹெச் பேட்டரியோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம் 51

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது லெனோவா கே 12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலிவு விலையில் இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil