Mobile

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ90 5ஜி ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி ஏ90 5ஜி ஸ்மார்ட்போன் அதன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. சாம்சங் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ90 5ஜி தென் கொரியாவில் ரூ.53,100  என்ற விலையில் நாளை விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளான Samsung Galaxy S10 மற்றும் Samsung Galaxy Note 10 மக்களிடம் மிகச் சிறந்த வரவேற்பினைப் பெற்றது.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ90 5ஜி ஸ்மார்ட்போன்!

பட்ஜெட் விலை என்பதால் அனைவரும் விருப்பத்துடன் வாங்கும் பட்டியலில் அது இணைந்தது, புதிய சாம்சங் கேலக்ஸி ஏ90 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான யுஐ உடன் இயங்குகிறது.

6.7 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி மற்றும் 1080×2400 பிக்சல்கள் டிஸ்ப்ளேவையும், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது.

க்வால்காமின் ஸ்னாப்டிராகன் 855 SoC கொண்டு இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி அளவிலான ரேம் கொண்டது. இதில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

கேலக்ஸி ஏ90 5ஜி ஆனது அதன் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் அளவிலான  முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா-வைட்-ஆங்கிள் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் ஆகியவைகளைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அமேசான் விற்பனை: சலுகை விலையில் பச்சை நிற ‘எல்.ஜி W30’

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் ஏ4!!

TechNews Tamil