சாம்சங் நிறுவனம் ஃபிரேம் டிவி 2020 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த ஃபிரேம் டிவி ஆனது சாம்சங் ஆர்ட் ஸ்டோர் பிரீ-இன்ஸ்டார் கொண்டதாகவும், மேலும் இது ஆப்பிள் ஏர்பிளே 2 வசதி கொண்டுள்ளது. ஃபிரேம் டிவியானது, அமெரிக்காவில் ஆறு வெவ்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த டிவியானது 75 இன்ச் மாடல் கொண்டதாகவும், மேலும் பிளிப்கார்ட்டில் மூன்று மாடல்களில் அறிமுகமாகிறது.
இந்த சாம்சங் ஃபிரேம் டிவி 2020 மாடலில் ஆர்ட் மோட் கொண்டதாகவும், ஃபிரேம் டிவியில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஃபிரேம் மற்றும் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

சாம்சங் 7இன் 1 டிவிகளில் ஆன்லைன் தரவுகளை பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் QLED தொழில்நுட்பம், இன்-பில்ட் மோஷன், பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த டிவிக்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் வயர்லெஸ் முறையில் இணைக்கப்படும்படியாக உள்ளது. இது ஸ்மார்ட் திங்ஸ் செயலி மற்றும்
ஒன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. இது பில்ட்-இன் ஏர்பிளே 2 வசதி கொண்டுள்ளது.