Mobile

அறிமுகமானது ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவமான ரெட்மி புதிய ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080 x 2340 பிக்சல் திர்மானம் கொண்டதாக உள்ளது.  இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

  1. ரெட்மி நோட் 8டி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வகையின் விலை – ரூ.14,065
  2. ரெட்மி நோட் 8டி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வகையின் விலை –  ரூ.15,670
  3. ரெட்மி நோட் 8டி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வகையின் விலை – ரூ.19,565
அறிமுகமானது ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன்!!

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் அட்ரினோ 610ஜிபியு வசதி கொண்டதாக உள்ளது. இத்துடன் ஆண்ட்ரய்டு 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இது 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32/64/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா, 13எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, இது 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

Android 10 அப்டேட் பெற்றுள்ள Motorola One Power!

TechNews Tamil

கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போனின் அமேசான் விற்பனை!

TechNews Tamil

தென்கொரியாவில் அறிமுகமாகியுள்ளது எல்ஜி Q92 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil